இந்தியா Covid-19

தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா!

Summary:

Corona increased in tharavi

சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் மகராஷ்டிராவில் கொரோனா அதிகம் பாதித்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது.

தாராவியில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதில் நேற்று மட்டும் தாராவியில் புதிதாக 94 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் மும்பை தாராவி பகுதியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 590- ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், தாராவியில் இன்று  2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.  தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement