தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தீவிரமாக பரவும் கொரோனா.! வெளியான புதிய வழிகாட்டு விதிமுறைகள்.!

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தீவிரமாக பரவும் கொரோனா.! வெளியான புதிய வழிகாட்டு விதிமுறைகள்.!


corona-increased-in-six-states

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வந்தது.

இந்தநிலையில் தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 9,855 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் கேரளாவில் 2,765 பேரும், பஞ்சாப்பில் 772 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா அதிகரித்திருப்பதால் மத்திய அரசு வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய வழிகாட்டு விதிமுறைகளை அறிவித்துள்ளது.

corona

அதன்படி முகக் கவசம் அணிவதும் தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவகங்களில் சாப்பிடுவோரை தவிர்த்து விட்டு உணவு பார்சல்கள் முறையை ஊக்கப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல், சானிட்டைசர் பயன்படுத்துதல், நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டும் அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.