இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு.? வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு.? வெளியான அதிர்ச்சி தகவல்!


Corona increased in india

சீனாவில் ஆரம்பித்து உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தடுமாறி வருகிறது.

ஆனாலும், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை எப்படியாவது சரிகட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன. சில நாடுகள் தொழில் தொடங்க அனுமதி வழங்கி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்துள்ளன.

corona

இந்தியாவில் நாளை மறுநாளுடன் (மே 3)ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. ஆனாலும் இந்தியாவில் தொடர்ந்து வைரஸ் தாக்கம் இருந்து வருவதால் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 31,787 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை நேற்று 33,610 ஆக அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிதாக 67 பேர் உயிரிழந்ததால், பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,075 ஆக உயர்ந்துள்ளது.