முதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கொரோனா பாதிப்பு! 500 பேர் உயிரிழப்பு!

முதன்முறையாக இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கொரோனா பாதிப்பு! 500 பேர் உயிரிழப்பு!


corona increased in india

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகளவில் கொரோனா தடுப்பூசியை (Corona Vaccine) கண்டுபிடிக்க வேண்டும் என விரைவான பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தியாவில் கொரோனா அதிவேகத்தில் பரவி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 28 ஆயிரத்து 701 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதாகவும், மேலும் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona
இந்தநிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆகவும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் இதுவரை 23,174 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை 5,53,471 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம்  அறிவித்துள்ளது.