இந்தியா Covid-19

வேகமெடுக்கும் கொரோனா.! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.?

Summary:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், பிரிட்டன் நாட்டில் புதியவகை கொரோனா இரண்டாம் பரவல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,99,066 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,46,444 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,895 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,63,382 ஆக உயர்ந்துள்ளது. 


Advertisement