இந்தியா

கொரோனாவால் இந்தியாவில் 5வது நபர் பலி! அதிகரித்து கொண்டே வரும் கொரோனாவின் பலி எண்ணிக்கை..!

Summary:

Corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. மேலும் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வழியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்நோயால் ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. தற்போது இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Advertisement