1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பாஸ்.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உத்திரப்பிரதேச அரசு..!

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பாஸ்.! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உத்திரப்பிரதேச அரசு..!


Corona

சீனாவின் உஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்ப்படுத்தி வருகிறது.சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த வைரஸ்.

இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 140க்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கபட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமடைந்துள்ளனர், மூவர் பலியாகியுள்ளனர்.

corona

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒருகட்டமாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. 

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கொரோனா எதிரொலியாக 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத தேவையில்லை எனவும் அனைத்து மாணவர்களும் பாஸ் என்ற அதிரடி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.