அட கடவுளே!! இது நடந்து 11 நாள் ஆச்சா!! கொரோனா உச்சமடைந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!!

அட கடவுளே!! இது நடந்து 11 நாள் ஆச்சா!! கொரோனா உச்சமடைந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்!!


corona-2nd-wave-becomes-high

இந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதியே உச்சமடைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள்தோறும் பலலட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும், ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தும்வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த  மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆனாலும் கொரோனாவின் தாக்கம்  தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு மிக மிக அதிகமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் கொரோனா 2ம் அலை மே 7ம் தேதியே உச்சமடைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேநேரம்  இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 81.7%லிருந்து 85.6% ஆகஅதிகரித்துள்ளது எனவும், 199 மாவட்டங்களில் கடந்த 3 வாரங்களாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.