இந்தியா

மூளையில் இரத்தம் கசிந்து இறந்துபோன சகோதரி.! இறுதிச் சடங்கு முடிந்த சில மணி நேரங்களில் பணிக்குத் திரும்பிய காவலர்.!

Summary:

Cop rejoins duty within hours of sisters demise

தனது சகோதரி இறந்தநிலையிலும், அவரது இறுதி சடங்கில் சிறிதுநேரம் இருந்துவிட்டு மீண்டும் காவல் பணிக்கு திரும்பிய காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் வரும் மே 3 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராடிவருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் வதோதரா காவல் நிலையத்தின் துணை சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அம்பாலா மொராஜிபாய் என்பவரின் செயல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட நாளில் இருந்து இவரது எல்லைக்கு உட்பட்ட பாண்யன் என்ற பகுதியில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில் உள்ள முதியவர்களுக்கு அடிப்படை தேவைகள் முறையாக கிடைக்கின்றதா? அதில் சிக்கல் இருந்தால் அவற்றை சரிசெய்வது போன்ற பணியில் ஈடுபட்டுவந்துள்ளார் அம்பாலா மொராஜிபாய் .

இந்நிலையில், அம்பாலா மொராஜிபாய் பணியில் இருந்தபோது அவரது சகோதரிக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவினால் அவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சகோதரி இறந்த செய்தி கேட்டதும் துடித்துப்போன அம்பாலா மொராஜிபாய், உயர் அதிகாரிகளிடம் சிலமணிநேரம் விடுப்பு வாங்கிக்கொண்டு தனது சகோதரியின் இறுதி சடங்கிற்கு சென்றுள்ளார்.

இறுதி சடங்கில் கலந்துகொண்ட அம்பாலா மொராஜிபாய் சகோதரிக்கு செய்யவேண்டிய இறுதி கடமைகளை செய்துவிட்டு, தனது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். 

இதுகுறித்து கூறிய அவர், ஒரு சகோதரனாக எனது கடமைகளை செய்துவிட்டேன். அதேநேரம் ஒரு காவலராகிய எனது பங்களிப்பு தற்போது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து சில மணி நேரங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன் என அம்பாலா தெரிவித்துள்ளார்.


Advertisement