வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ,உற்சாகத்தில் கேரள மக்கள் .!

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காங்கிரஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ,உற்சாகத்தில் கேரள மக்கள் .!


congress built 1001 new houses for kerala flood

கேரள மாநிலத்தில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு 1001 வீடுகள் கட்டித் தரப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

 கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் தொடர் மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

 மேலும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் மாநிலத்திற்கு 30 ஆயிரம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அரசு சார்பில் மதிப்பிடப்பட்டு மாநில நலனுக்காக பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது

congress

இந்த நிலையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1001 வீடுகள் கட்டித் தரப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.மேலும் 5 லட்சம் மதிப்பீட்டில் ஒரு வீடு என கணக்கிடப்பட்டு 5.05 கோடி செலவில் 1001 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இதற்காக.கட்சித் தொண்டர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி திரட்ட வும் முடிவு செய்யப்பட்டுள்ளது.