அதிரடி கட்டுப்பாடு! திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை! இப்படியும் கிராமங்களா

அதிரடி கட்டுப்பாடு! திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த தடை! இப்படியும் கிராமங்களா


Conditions not to use mobile phones

குஜராத்தில் உள்ள 12 கிராமங்களில் வசிக்கும் தாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் பயன்படுத்த கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் தந்தேவாடா தாலுகாவில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த சுமார் 800 தாக்கூர் சமூக தலைவர்கள் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஒன்று கூடி ஆலோசனை செய்துள்ளனர். அந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

gujarat

இதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய இரண்டு தீர்மானங்கள் கலப்பு திருமணம் மற்றும் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பானது. இந்த தீரமானத்தில் நிறைவேற்றப்பட்ட கட்டுப்பாடுகளை தாக்கூர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீறினால் அந்த குடும்பங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

gujarat

இதன்படி தாக்கூர் சமூக பெண்கள், மற்ற சமூக ஆண்களை காதலித்தாலோ, திருமணம் செய்து கொண்டாலோ அவரின் குடும்பத்திற்கு ரூ.1.5 லட்சம் அபராதமும், தாக்கூர் சமூகத்தை சேர்ந்த ஆண்கள் மற்ற சமூக பெண்களை காதலித்து, திருமணம் செய்து கொண்டால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

gujarat

மேலும் திருமணம் ஆகாத தாக்கூர் சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்த கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மீறி பெண்கள் மொபைல் பயன்படுத்தினால் பெற்றோர்கள் தான் காரணம் என கூறி அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த வாவ் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இதற்கு அஆதரவு தெரிவித்துள்ளார்.