இந்தியா

அக்டோபரில் கல்லூரிகள் மீண்டும் திறப்பு.! கர்நாடக அமைச்சர் அறிவிப்பு.!

Summary:

college will open in octobar

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தளர்வுகளுடன் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன. இந்தநிலையில் கர்நாடக அரசு ஊரடங்கு விதிமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி இயல்பு வாழக்கை திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மீண்டும் தொடங்க அம்மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாடுமுழுவதும் பள்ளி, கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், வரும் அக்டோபர் மாதம் முதல் நடப்பு கல்வியாண்டைத் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக துணை முதலமைச்சரும், மாநில உயர்கல்வி துறை அமைச்சருமான சி.என் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து வழிகாட்டு விதிமுறைகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம், மாநில அரசும் இது தொடர்பாக கூடுதலாக எந்தவொரு உத்தரவுகளும் வெளியிட வாய்ப்புள்ளது. மீண்டும் கல்லூரி திறந்ததும் அனைத்து இளங்கலை, தொழிற்கல்வி மற்றும் பொறியியல் மாணவர்களுக்கும் இறுதி ஆண்டு தேர்வுவை உடனடியாக நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Advertisement