புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
சமூக வலைதள விபரீதம்... கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்புணர்வு... நடன ஆசிரியர்கள் 3 பேர் கைது.!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தனியார் நடனப்பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றும் ஆன்டி ஜார்ஜ் என்ற நபர் சமூக வலைதளம் மூலமாக கல்லூரி மாணவி ஒருவருடன் பழகி வந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து அதனை வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும் தனது நண்பர்களான சசி மற்றும் சந்தோஷ் ஆகியோரையும் தனது வீட்டிற்கு வரவழைத்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் .
இதனைத் தொடர்ந்து மாணவியின் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் தனியார் பள்ளியில் நடன ஆசிரியர்களாக பணியாற்றும் ஆன்டி ஜார்ஜ், சந்தோஷ் மற்றும் சசி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பென்டிரைவ் ஆகியவையும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான ஆன்டி ஜார்ஜ் இது போன்ற பல வழக்குகளில் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.