இந்தியா

கல்லூரி வாசல்முன் உயிரோட தீ வைத்து எரிக்கப்பட்ட கல்லூரி ஆசிரியை! வெளியான பதறவைக்கும் சம்பவம்!

Summary:

college lecturer try to murder in college cambus

மகாராஷ்டிரம் மாநிலம் வர்தா மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கிதா பிசுடே. அவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் இன்று காலை 7 மணியளவில் தனது கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது கல்லூரி வாசலில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் அங்கிதாவின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி  அவரை தீ வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றி நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு 40% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக பிகேஷ் நாக்ரேல் என்பவரை போலீசார் கைது செய்து தீ வைத்து எரித்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர் திருமணமானவர் என்பவர் என்பதால் பல கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Advertisement