இந்தியா

கொரோனா வைரஸால் எங்களுக்கு பயம் இல்லை..! தனி முகாமில் குத்தாட்டம் போட்ட இந்திய மாணவர்கள்!

Summary:

China returned indian students are dancing without corono fear

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவிவரும் கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. பாம்பு சூப்பில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படும் இந்த உயிர் கொல்லி வைரஷிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், இந்த வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவை தாண்டி இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவிவருகிறது. இந்தியாவில் கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், சீனாவில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த சுமார் 330 மாணவர்களை இந்திய அரசு சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்துவந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வைரஸ் தாக்கம் இருக்கும் என கூறப்படும் நிலையில் இவர்கள் அனைவரும் இந்தியா ராணுவம் சார்பில் ஹரியானா மாநிலத்தில் மானேசர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்கள் தங்களுக்கு கொரோனா வைரஸ் பற்றி எந்த அச்சமும் இல்லை என்பதுபோல இந்தி பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்டு ஆட்டும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement