
china blick indian media
கிழக்கு லடாகின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய- சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தினர் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அங்கு நடந்த மோதலை அடுத்து எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்தநிலையில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் சீனா அனைத்து இந்திய செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இணையதளங்களை தடை செய்து உள்ளது.
சீன செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அணுகவதற்கு, இந்தியாவில் தடையின்றி உள்ள நிலையில், வி.பி.என் எனப்படும் விர்ச்சுவல் ப்ரைவேட் நெட்வர்க்கைக் கொண்டுள்ள இந்திய ஊடக இணையதளங்களை மட்டுமே சீன மக்கள் அணுக முடியும். கடந்த இரண்டு நாட்களாக, சீனாவில், டெஸ்க்டாப் கணிணிகளிலும் ஐ-போன்களிலும் எக்ஸ்பிரஸ் விபிஎன் பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிக் டாக் செயலி உட்பட 59 சீன பயன்பாடுகளுக்கு, இந்திய அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது. எனினும், இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முன்னரே சீனா இந்திய ஊட்கங்களை தனது நாட்டில் தடை செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் நாட்டிற்கு எதிராக உள்நாட்டிலோ அல்லது நாட்டின் வெளியிலிருந்தோ எந்த கருத்துக்கள் வெளி வந்தாலும், அதன் மூலத்தை முடக்கி விட வேண்டும் என்பதை சீன அரசாங்கம் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது.
Advertisement
Advertisement