இந்தியா

13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர்! சாமர்த்தியமாக தடுத்து நிறுத்திய சிறுமி!

Summary:

child marriage stopped

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமிக்கு தெரியாமலே பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்ததால், அதை அந்த சிறுமி தைரியமாக தடுத்து நிறுத்திய சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் ப்ரீத்தி என்ற பள்ளி மாணவியின் பெற்றோர் சிறுமிக்கே தெரியாமல் அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ப்ரீத்தியின் குடும்பத்தில் அவரது தந்தை மட்டும் சம்பாதித்து வந்துள்ளார். இதனால் ஊரடங்கு நேரத்தில் திருமணத்தை முடித்துவிடலாம் என முடிவு செய்துள்ளார். இந்தநிலையில் மணமகனின் குடும்பத்தினர் திருமண தேதியை முடிவு செய்ய ப்ரீத்தியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். 

ப்ரீத்திக்கு அப்போது தான் தனக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருப்பதை அறிந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள அவரது சகோதரனின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார் ப்ரீத்தி. இந்தநிலையில் திருமண தேதி முடிவு செய்த மறுநாளே சகோதரனின் செல்போனில் இருந்து தனது பள்ளி ஆசிரியரை தொடர்புகொண்டு தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்கின்றனர். எனக்கு விருப்பமில்லை, எனவே திருமணத்தை நிறுத்துங்கள் என்று சிறுமி ஆசிரியரிடம் கூறியுள்ளார். 

இதையடுத்து ப்ரீதியின் ஆசிரியர் அவரது பெற்றோரை தொடர்பு கொண்டு, தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்று அவர்களை சமாதானப்படுத்தினார். இதனையடுத்து, பெற்றோர்கள் ப்ரீத்தியின் திருமண ஏற்பாடை நிறுத்தியுள்ளனர்.


Advertisement