முதல் கணவன் மரணம்.. 10 வயது குறைந்த நபருடன் 2 வது காதல் திருமணம்.. 2 மாதத்தில் இளம் பெண்ணிற்கு நடந்த துயரம்

முதல் கணவன் மரணம்.. 10 வயது குறைந்த நபருடன் 2 வது காதல் திருமணம்.. 2 மாதத்தில் இளம் பெண்ணிற்கு நடந்த துயரம்


Chhattisgarh young dead who married 10 years old boy

முதல் கணவன் உயிரிழந்தநிலையி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண் மர்மனான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் ஒருவருக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்நிலையில் தன்னைவிட 10 வயது குறைவான இளைஞர் ஒருவரை காதலித்துவந்த அந்த பெண் அவரை 2 மாதத்திற்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அந்த பெண் அவரது வீட்டு கழிவறையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் அந்த பெண்ணின் கணவரிடம் விசாரித்ததில், மதியம் கழிவறைக்குள் சென்ற தனது மனைவி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் தான் சந்தேகமடைந்து கழிவறைக்குள் சென்று பார்த்ததாகவும், அங்கு அவர் தலையில் காயம் ஏற்பட்டநிலையில் இறந்து கிடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்ச்சித்தபோது கயிறு அறுந்து கீழே அவர் விழுந்திருக்கலாம் என கணவர் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் கணவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதுவரை அந்த பெண் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.