ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
சீமராஜா படத்தில் போல் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை!! தலைதெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தார் பகுதியில் குடியிருக்கும் வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் உள்ளவர்கள் சிறுத்தையை வீட்டிற்குள்ளே வைத்து அடைத்து வைத்துவைத்துவிட்டு, வெளியில் வந்து அலறல் சத்தம் போட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியின் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிறுத்தையை பிடிக்க பெரிய வலை ஒன்றை எடுத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால்அவர்களிடம் மீண்ட சிறுத்தை மக்களின் மீது கடும் கோபம் கொண்டது.
ஒருகட்டத்தில் சினம்கொண்ட சிறுத்தை அங்கிருந்த மக்களை ஓட.. ஓட விரட்ட ஆரம்பித்தது, இதனால் மக்கள் அனைவரும் அவர்களை காப்பாற்றிக்கொள்ள துண்டை காணோம்.. துணியை காணோம் என்று தலைதெறித்து ஒட்டியுள்ளனர்.
ஆனாலும் அந்த விவகாரத்தில் ஈடுபட்ட பலரை சிறுத்தை கடித்து பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் சிறுத்தை பிடிபட்டதா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அங்கு நடந்த சம்பவம் தமிழ் சினிமாவான "சீமராஜா" படக்காட்சி போல் நடந்துள்ளது.