இலங்கையை போன்ற அபாயகட்ட பொருளாதார நிலையில் இந்தியா?.. பிரதமருக்கு அரசுத்துறை அதிகாரிகள் பகீர் எச்சரிக்கை.!

இலங்கையை போன்ற அபாயகட்ட பொருளாதார நிலையில் இந்தியா?.. பிரதமருக்கு அரசுத்துறை அதிகாரிகள் பகீர் எச்சரிக்கை.!


Central Govt Officers Warning Unwanted Free Scheme to Peoples

மாநில அரசுகளின் தேவையற்ற இலவச திட்டத்தால், இலங்கையை போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை இந்தியாவும் சந்திக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் துறை செயலாளர்கள் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பிரதமரின் முதன்மைச் செயலாளர் பீ.கே. மிஸ்ரா, அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா உட்பட பலரும் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, பெரிய வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க புதிய கண்ணோட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் பிரதமரிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் காரணமாக பல மாநிலத்திலும் பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

Govt Officers

இதனால் இந்தத் திட்டங்கள் அனைத்தும் பொருளாதார ரீதியாக நீடிக்க இயலாதவை. இது திட்டங்கள் மூலம் இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி பிரச்சனை போல, நமக்கும் ஒரு காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்ற அபாயத்தின் அளவையும் சுட்டிக்காண்பித்துள்ளனர்.