அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் தண்டனை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் தண்டனை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு!


Central government order

சீனாவில் ஆரம்பித்த கொரோனா உலக நாடுகளில் அதிகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, அத்தியாவசிய பொருட்களின் வரத்து இல்லாததால், அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலை உயர்ந்து விட்டதாகவும் பல்வேறு மாநிலங்களில் பேசப்பட்டு வருகிறது.

Food

இதுகுறித்து தகவலறிந்த மத்திய அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதில், ஊரடங்கு காலத்தில், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் உற்பத்திக்கும், எடுத்துச் செல்வதற்கும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து இருந்தது.

ஆனால், ஆட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் 7 ஆண்டு ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.