செல்போனால் வந்த வினை.. பெற்ற தாயை கொடூரமாக கொலை செய்த மகன்.. அதிர்ச்சி சம்பவம்..!



Cell phone message.. Son brutally murdered his birth mother.. Shocking incident..!

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் கினிசீரா கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் செல்போனிற்கு அடிமையாகி தினமும் அதிலே நேரத்தை செலவிட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தாய் தனது மகனை கடுமையாக திட்டி உள்ளார். மேலும் சம்பவத்தன்று செல்போன் விவகாரம் காரணமாக மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் வந்துள்ளது. அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மகன் பெற்ற தாய் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக அவரது தாயை கடுமையாக தாக்கியுள்ளார்.

KERALA

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.