இந்தியாவையே அதிரவைத்த புள்ளி பாய் ஆப் விவகாரம்.. முக்கிய குற்றவாளியான 20 வயது கல்லூரி மாணவர் கைது.!

இந்தியாவையே அதிரவைத்த புள்ளி பாய் ஆப் விவகாரம்.. முக்கிய குற்றவாளியான 20 வயது கல்லூரி மாணவர் கைது.!


Bulli Bai App Case Assam Youngster Neeraj Bishnoi Studies Bhopal VIT B Tech Arrested

கடந்த 3 நாட்களாக இந்தியாவை பெறும் பரபரப்புக்கு உள்ளாக்கிய விஷயமாக அமைந்தது புள்ளி பாய் ஆப். குறிப்பிட்ட மதத்தை சார்ந்த இளம்பெண்களின் புகைப்படத்தை பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்திய புள்ளி பாய் ஆப் குறித்த விசாரணை டெல்லி ஐ.எப்.எஸ்.ஓ பிரிவினருக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

இதனையடுத்து, களத்தில் இறங்கிய அதிகாரிகள் பெங்களூரை மற்றும் மும்பை, உத்திரபிரதேசம் மாநிலத்தை சார்ந்த 4 பேரை தற்போது வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், இளம்பெண்கள் 2 பேர் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அசாமை சார்ந்த 20 வயது வாலிபரை டெல்லி ஐ.எப்.எஸ்.ஓ காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Bulli Bai

புள்ளி பாய் செயலி விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நீரஜ் பிஷ்ணோய் என்ற வாலிபரை இன்று அதிகாரிகள் டெல்லியில் கைது செய்துள்ளனர். இவர் புள்ளி பாய் செயலியை உருவாக்கி, அதனை தவறான வழியில் உபயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

20 வயதாகும் வாலிபர் நீரஜ் பிஷ்ணோய் அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹட் பகுதியை சார்ந்தவர். இவர் போபாலில் உள்ள வேலூர் பல்கலைக்கழகத்தில் (Vellore Institute of Technology, Bhopal) பி.டெக் பயின்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.