இந்தியா

நிறைமாத கர்ப்பிணி தங்கையை 4 கி.மீ தள்ளு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அண்ணன்..! ஆம்புலன்ஸ் வரமறுத்ததால் நடந்த சோகம்.!

Summary:

Brother taken on handcuffed sister in labor pain

108 ஆம்புலன்ஸ் வாகனம் வராத நிலையில், பிரசவ வலியால் துடித்த தனது தங்கையை அண்ணன் ஒருவர் தள்ளுவண்டியில் கொண்டுசென்று மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் சமீபத்தில் அசாமில் நடந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்துக்கு வசதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைகளுக்கு கூட வாகனங்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையியல், அஸ்ஸாம் மாநிலத்தில் துப்ரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரசவ வலியால் துடித்த தனது தங்கையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நீண்ட நேரமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முயற்சி செய்தும் வாகனம் வராததால் வலியில் துடித்த தனது தங்கையை 3 முதல் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தள்ளுவண்டியில் வைத்து கொண்டு சென்றதாக கூறியுள்ளார்.

குறித்த இளைஞர் தனது தங்கையை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச்செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement