தங்கையை திருமண மண்டபத்திற்குள் கையால் தாங்கி வரவேற்கும் அண்ணன்கள் - நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!

தங்கையை திருமண மண்டபத்திற்குள் கையால் தாங்கி வரவேற்கும் அண்ணன்கள் - நெகிழ்ச்சி வீடியோ வைரல்.!


Brother Sister Bond Marriage Feeling Sentiment Video Goes Viral

அண்ணன் - தங்கை பாசம் என்பது பிறப்பால் போடப்பட்ட முடிச்சாகும். அண்ணனின் பாசத்திற்காக தங்கை ஏங்குவதும், தங்கையின் பாசத்திற்க்காக அண்ணன் ஏங்குவதும், ஒருவருக்கொருவர் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், தங்களின் பாசப்பிணைப்பால் பிரிக்க இயலாத அளவு ஈடற்ற பந்தத்தை கொண்டிருப்பார்கள். 

இன்றளவில் விரும்பத்தகாத பல துயரங்கள் சொத்து, பணம், பாலியல் பிரச்சனை என நடந்து வந்தாலும், அவை அனைத்தும் காலத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட இடைக்கால கொடுமை என்பதே நிதர்சனம். குடும்ப உறவுகளை நம்மிடையே உடைக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், புரட்சி பேசிய மேலை நாட்டவரோ, பாச பந்தத்தில் உள்ள அர்த்தங்களை உணர்ந்து, இன்று நமது கலாச்சாரத்தை பின்பற்ற தொடங்கிவிட்டனர் என்பதே நிதர்சனம். 

இந்த நிலையில், வடமாநிலத்தில் பிடிக்கப்பட்டதாக தெரியவரும் காணொளியில், தங்கையின் திருமணத்தில் அண்ணன்கள் செய்த பாசப்பிணைப்பு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தங்கை திருமண கோலத்தில் பூக்களின் மீது நடந்து வர, அண்ணன்கள் தங்களின் உள்ளங்கையில் வைத்து தங்கையை தாங்கி மறுவீட்டிற்கு அனுப்பி வைக்க மனதில் சோகம் இருந்தாலும், அதனை வெளிக்கொணராது இன்முகத்துடன் தங்கையை திருமண மண்டபத்தில் வரவேற்கின்றனர்.