இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. தங்கைக்காக தற்கொலை செய்துகொண்ட அண்ணன்! அதிர்ச்சி சம்பவம்!!

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. தன் தங்கைக்காக தற்கொலை செய்துகொண்ட அண்ணன்! அதிர்ச்சி சம்பவம்!!


brother-commits-suicide-for-loan-cancelled

கேரளா மாநிலம் திருச்சூர் குண்டுவாற பகுதியைச் சேர்ந்தவர் வாசு மற்றும் பேபி. இவர்களுக்கு விபின் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர். வாசு மர வேலைகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அதனைத் தொடர்ந்து விபின் குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் வித்யா, நிதின் என்பவரை கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவரின் காதலுக்கும் பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டிய நிலையில் அவர்களது திருமணம் கடந்த மாதம் 12ஆம் தேதி நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. காதல் திருமணம் என்பதால் நிதின் வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால் விபின் தனது தங்கைக்கு நகையும், பணமும் கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நிலம் மற்றும் வீட்டை அடகு வைத்து அவர் வங்கியில் கடன் கேட்டுள்ளார்.  வங்கியும் பணம் தர ஒப்புக் கொண்ட நிலையில் அவர் தங்கையுடன் சென்று நகைகளை தேர்வு செய்து, வாங்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் கடைசியில்  வங்கி நிர்வாகம் லோன் தர மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த விபின் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

brother

இந்நிலையில் கதறித் துடித்த விபின் குடும்பத்தினருக்கு நிதின் குடும்பத்தினர் ஆதரவாக இருந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் விபின் ஆசைப்படி வித்யாவிற்கு நகைகள் போட்டு கடந்த 29-ம் தேதி நிதினுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். நெருங்கிய உறவினர்கள் மட்டும் இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் நெஞ்சை உருக வைத்துள்ளது.