பிராய்லர் கோழி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா.? தாறுமாறாக குறைந்த சிக்கன் விலை.!

பிராய்லர் கோழி மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறதா.? தாறுமாறாக குறைந்த சிக்கன் விலை.!



Broiler rate decreased due to corona virus rumor

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், பிராய்லர் கோழி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக ஏற்பட்ட வதந்தியால் கோழி கறி விலை சரிந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிய இந்த வதந்தியே பிராய்லர் கோழி விலை சரிவிற்கு மிக முக்கிய காரணம் என கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பரவிய இந்த வதந்தியால் க்ரிஷ்ணகிரியில் இருந்து கர்நாடகத்திற்கு பிராய்லர் கோழிகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இதனால் தேவைக்கு அதிமுகமாக சென்னையில் பிராய்லர் கோழிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Corona virus

கோழிகள் வரத்து அதிகரித்ததால் 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிராய்லர் கோழி 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. உரித்த கோழி 160 ரூபாய் வரை குறைந்துள்ளது. கோழி கறியின் இந்த கடுமையான விலை சரிவால் தொழிலாளர்களும் கோழி பண்ணை உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என இறைச்சி வியாபாரிகளும், கோழி பண்ணை உரிமையாளர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதனிடையே, கோழி இறைச்சி வழியே கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இல்லை என மத்திய அரசு ஏற்கனவே விளக்கமளித்திருப்பது குறிப்பிடதக்கது.