இந்தியா

திருமணமான ஒரு மாதத்திலேயே மாயமான புதுமனைவி! தேடிசென்றபோது மாமனார் போட்டுடைத்த பேரிடி! பகீர் சம்பவம்!

Summary:

Bride takes off with gifts, jewels from husband house

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜயிஸ் ரத்தோட்.  இவரது உறவினரான மனு ரத்தோட் என்பவர் மணிலால் என்பவரிடம் ஜயிஸ்க்கு திருமணம் செய்ய பெண் பார்க்கசொல்லி கூறியிருந்த நிலையில், அவர்கள் களவாடி கராதி என்ற பெண்ணை குறித்து கூறியுள்ளனர்.  அவரை பார்த்ததுமே ஜயீஸ்க்கு பிடித்து விட்ட நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

 இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு களவாடி திடீரென தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரிடமும் சொல்லாமல் மாயமானார். இதனால் பதறிப்போன ஜயீஸ் இதுகுறித்து அவரது மாமனார் சஞ்சித்திடம் விசாரித்தபோது, இனி என் மகள் உன்னோடு வர மாட்டாள். நான் பணத்திற்காக தான் அவளை உனக்கு திருமணம் செய்து வைத்தேன் என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜயீஸ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், எங்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சஞ்சித் தனக்கு பணப்பிரச்சினை இருப்பதாகவும், உதவியாக 1.55 லட்சம் கொடுக்கும்படியும் கேட்டார். மேலும்  அதனை  ஐந்து மாதத்திலேயே திருப்பித் தந்து விடுவதாகவும் கூறினார். நானும் அவரை நம்பி பணம் கொடுத்து உதவினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார்.

 இந்நிலையில் எனது மனைவி களவாடி வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தற்போது ஓடிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள களவாடி அவரது தந்தை சஞ்சித் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Advertisement