அடேய்.. உங்க லொள்ளுக்கு ஒரே அளவே இல்லையா.. இந்த பியூட்டிஃபுல் பாய்க்கு மணமகள் தேவையாம்!

அடேய்.. உங்க லொள்ளுக்கு ஒரே அளவே இல்லையா.. இந்த பியூட்டிஃபுல் பாய்க்கு மணமகள் தேவையாம்!


Bride need for dog viral Facebook post

நாய் குட்டிக்கு மணமகள் தேடிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேட்ரிமோனி இணையதளங்களை தாண்டி தற்போது சமூக வலைத்தளங்களிலும் மணமகன் தேவை, மணமகள் தேவை என விளம்பரங்கள் வர தொடங்விட்டதை நாம் பார்த்துவருகிறோம். அதேபோல் சிலர், தங்கள் வீட்டில் வளர்ந்துவரும் செல்ல பிராணிகளுக்கும் மணமகள், மணமகன் தேட ஆரம்பித்து விட்டனர்.

அந்த வகையில் கேரளாவில் ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஒரு விளம்பரம் சுற்றி வந்தது. அந்த விளம்பரத்தில், உங்கள் அழகான மகளை திருமணம் செய்து கொள்ள யாராவது ஒரு அழகான மலையாளி மாப்பிளையை தேடுகிறீர்களா என பதிவிடப்பட்டுள்ளது.

சரி, யாருப்பா அந்த மாப்பிளை என்று பார்த்தால், அது ஒரு நாய் குட்டி. ஆம், வேஷ்டி சட்டை அணிந்து ஜம்ம்னு அமர்ந்திருக்கும் அந்த நாய்குட்டிக்குத்தான் அழகான பெண் நாய் குட்டி மணமகளாக தேவை என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அடேய்.. உங்க லொள்ளுக்கு ஒரே அளவே இல்லையா என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.