திருமணம் முடிந்து மூன்றே நாளில் இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்! அதிர்ச்சியில் இருந்து மீளாத கணவன்!
திருமணம் முடிந்து மூன்றே நாளில் இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்! அதிர்ச்சியில் இருந்து மீளாத கணவன்!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கன்ஹய்லால். இவருக்கும் பூஜா என்ற இளம்பெண்ணுக்கும் மூன்று நாட்களுக்கு முன்னர் திருமணம் முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்தும் உறவினர்கள் கன்ஹய்லால்லின் வீட்டில் இருந்துள்ளனர். சுமார் 16 பேர் வீட்டில் இருந்த நிலையில் அனைவரும் இரவு உணவை முடித்துள்னனர்.
இரவு உணவுக்கு பிறகு பூஜா அனைவர்க்கும் தேனீர் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த தேநீரில் அனைவர்க்கும் மயக்க மருந்து கொடுத்து அனைவரையும் மயக்கம் அடைய செய்துள்ளார். இந்நிலையில் அனைவரும் மயக்கமான பிறகு அவர்களிடம் இருந்த தங்க நகைகள், வீட்டில் இருந்த 40 ஆயிரம் பணம், நகைகள் என அனைத்தையும் தனது சகோதரனுடன் சேர்ந்து கொள்ளை அடித்துவிட்டு பூஜா தலைமறைவாகியுள்ளார்.
அடுத்த நாள் காலை உறவினர் ஒருவர் கன்ஹய்லால் வீட்டிற்கு வந்தபோது அனைவரும் மயக்கமாக இருப்பதை பார்த்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். தனது மனைவியின் செயலால் அதிர்ச்சி அடைந்த கன்ஹய்லால் இதுகுறித்து புகார் அளித்ததை அடுத்து பூஜா மற்றும் அவரது சகோதரர் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.