இந்தியா

திருமணம் முடிந்த கையோடு ஆசை தீர மணப்பெண் செய்த காரியம்! வாயடைத்து போன உறவினர்கள்..!

Summary:

Bride eating pani poori video

திருமணம் என்றாலே திருமணம் முடிந்த கையோடு மாப்பிளையும் பெண்ணும் பெண்ணின் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் மாப்பிளை வீட்டிற்கு செல்வது வழக்கமான ஓன்று. இந்நிலையில் வட இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு சில வாரங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த புது பெண். தனது பெண் புகுந்த வீட்டிற்கு செல்ல இருப்பதை அறிந்த பெண்ணின் தாய் தனது மகளுக்கு மிகவும் பிடித்த பானி பூரியை செய்து வைத்துள்ளார்.

தான் ஒரு மணப்பெண் என்பதையும் மறந்து, தான் அணிந்திருக்கும் நகைகள் இடையூறு செய்வதையும் தவிர்த்து அந்த பானி பூரியை ஆசை ஆசையாக சாப்பிடுகிறார் அந்த மணப்பெண். இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்ய தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.


Advertisement