இந்தியா

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண்ணிற்கு மாரடைப்பு.! பதறிய மாப்பிள்ளை.! இறுதியில் நேர்ந்த பரிதாபம்.!

Summary:

ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த பிஷிகேசன் என்பவருக்கும், ரோஷி என்ற பெண்ணுக்கும்

ஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த பிஷிகேசன் என்பவருக்கும், ரோஷி என்ற பெண்ணுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பிறகு ரோஷியை கணவர் வீட்டுக்கு வழியனுப்பி வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.

அப்போது பெற்றோரை பிரிய மனமில்லாமல் ரோஷி அழுது கொண்டே இருந்துள்ளார். பெற்றோரை பிரிந்து செல்கிற கவலையில் அவர் தொடர்ந்து அழுதபடி இருந்தநிலையில் ரோஷியை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை தேற்ற முயன்றும் முடியவில்லை.

பெற்றோரை பிரிந்து செல்ல முடியாமல் அழுதுகொண்டிருந்த ரோஷி திடீரென தரையில் சுருண்டு விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்து ரோஷியை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அங்கு ரோஷியை பரிசோதித்த மருத்துவர்கள் கடுமையான மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.


Advertisement