இந்தியா

காத்துவாக்குல இரண்டு காதல் செய்த இளைஞர்... கிராமத்தினரின் உத்தரவால் உல்ட்டாவான பேச்சுவார்த்தை..! ஒரேநேரத்தில் இருவரையும் கரம்பிடித்த ஜாக்பாட்..!

Summary:

காத்துவாக்குல இரண்டு காதல் செய்த இளைஞர்... கிராமத்தினரின் உத்தரவால் உல்ட்டாவான பேச்சுவார்த்தை..! ஒரேநேரத்தில் இருவரையும் கரம்பிடித்த ஜாக்பாட்..!

மனைவி இருந்தும் வேலைக்குச் சென்ற இடத்தில் காதல் வயப்பட்டதால் இளைஞர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் கரம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள லோஹர்டகா மாவட்டம் பண்டா கிராமத்தை சேர்ந்தவர் சந்திப். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த குசும் லக்ரா என்ற பெண்மணியுடன் கடந்த மூன்று வருடங்களாக திருமணமாகாமல் ஒன்றாக வசித்து வந்த நிலையில், இருவருக்கும் 17 வயதுடைய குழந்தை உள்ளது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மேற்குவங்கத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது செங்கல் சூளையில் உடன் பணியாற்றிவந்த சுவாதி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விஷயம் கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது.

சந்திப் ஏற்கனவே திருமணமாகாமல் பெண்ணுடன் வசித்து வந்தார் என்பது தெரிந்த நிலையில், கிராமத்தினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு பெண்களையும் திருமணம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இளைஞர் இருவரையும் ஒரே நேரத்தில் கரம் பிடித்தார்.


Advertisement