#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
அழகிய இளம் பெண்ணிற்கு அத்தை மகனால் ஏற்பட்ட சோகம்! தீயில் கருகிய இரண்டு உயிர்கள்.
கேரளா மாநிலம் எா்ணாகுளம் பகுதியை சேர்ந்வதவர் ஷாலன். இவரது மகள் தேவிகா(17) அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வடக்கு பரவூரை சேர்ந்த வேதிகாவின் மாமா பையன் மிதுன் என்பவரும், வேதிகாவும் நெருங்கி பழகிவந்துள்ளனர்.
தனது உறவு கார பையன்தான் என நினைத்து வேதிகா பழக, அதை காதல் என்று புரிந்துகொண்டு வேதிகாவை ஒருதலையாக காதலித்துள்ளார். பி்ன்னா் இந்த விசயத்தை தேவிகாவுடன் கூறிய போது அதிா்ச்சியடைந்த அவள் அந்த காதலை ஏற்றுக்கொள்ளாமல் மிதுனிடம் பேசுவதை தவிா்த்தாள்.
தன்னிடம் வேதிகா பேசாததால் ஆத்திரம் அடைந்த மிதுன் வேதிகா படிக்கும் பள்ளி, டியூசன் சென்டர் என பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார் வேதிகா. தேவிகா சொன்னதும் பெற்றோா்கள் மிதுனின் தந்தையிடம் சொல்லி மிதுனை எச்சாித்துள்ளனா்.
இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த மிதுன் நேராக வேதிகா வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் சென்று வீட்டின் கதவு தட்டி வேதிகாவை வெளியே அழைத்துள்ளார். தனது தந்தையுடன் வெளியே வந்த வேதிகாவை கையை பிடித்து இழுத்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார் மிதுன்.
மேலும், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் பெற்றோர் கண் முன்னே வேதிகா இறந்தார். காயத்துடன் இருந்த மிதுனை மருத்துவமனையில் சேர்க்க, சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.