இந்தியா

பார்க்கும்போதே கண் கலங்குது!! அந்த மனசு தான் சார் கடவுள்..!! சாலையில் 2 சிறுவர்கள் செய்த காரியம்.. வைரல் வீடியோ..

Summary:

டெல்லியில் சாலை ஒன்றின் சிக்னலில் நடந்த காட்சி பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.

டெல்லியில் சாலை ஒன்றின் சிக்னலில் நடந்த காட்சி பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.

சிக்னலில் நின்றுகொண்டிருக்கும் கார் ஒன்றில் இருக்கும் சிறுவன், சாலையில் தனது காரின் அருகே நின்றுகொண்டிருக்கும் வீடு இல்லாத ஒரு சிறுவனை பார்க்கிறான். உடனே தன்னிடம் இருந்த அனைத்து விளையாட்டு பொருட்களையும் எடுத்து அந்த சிறுவனுக்கு விளையாட கொடுக்கிறான். அந்த சிறுவனும் சற்று நேரம் விளையாடிவிட்டு, அந்த விளையாட்டு பொருட்களை மீண்டும் அந்த சிறுவனிடம் கொடுக்கிறான்.

ஆனால் அந்த சிறுவன் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. நீயே வைத்துக்கொள் என அந்த ஏழை சிறுவனுக்கே கொடுத்துவிடுகிறான். பதிலுக்கு அந்த ஏழை சிறுவனும், அங்கிருந்த கடை ஒன்றில் தின்பண்டம் வாங்கிவந்து காரில் இருக்கும் சிறுவனுக்கு கொடுக்க, அந்த சிறுவன் உடனே அதை பெற்றுக்கொண்டு இருவரும் மாறி மாறி சாப்பிடுகின்றனர்.

பின்னர் கார் அங்கிருந்து நகர, சிறுவர்கள் இருவரும் டாட்டா காட்டியபடி பிரிக்கின்றனர். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.


Advertisement