காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
பெண் மருத்துவர்கள் கொலைவழக்கில் குற்றவாளிகளின் உடல்கள் குறித்து வெளியான பகீர் தகவல்! மருத்துவர்கள் அச்சம்!

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் தப்பித்து செல்லும்போது போலீசார் அவர்களை சுட்டு கொன்றனர். இதனை அடுத்து கொலையாளிகள் நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காந்தி மருத்துவமனையில் வகைப்பட்டுள்ளது.
இதுவரை நால்வரின் உடல்களும் அடக்கம் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளதால், இன்னும் சில நாட்களில் நான்கு உடல்களும் அழுகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்யாமல் இருந்திருந்தால் குளிரூட்டியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்க முடியும் என்றும், உடலை அறுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு விட்டதால் அப்படி செய்ய முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டால் embalming செய்து உடலை பாதுகாக்க முடியும். ஆனால், எம்பளமிங் செய்த பின்னர் மீண்டும் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்தால் இரண்டு முடிவுகளும் மாறுபட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.