பாவம் அந்த சிறுவன்!! ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து 15 வயது சிறுவன் பலி!! மருத்துவர்கள் கூறும் காரணம்..

பாவம் அந்த சிறுவன்!! ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து 15 வயது சிறுவன் பலி!! மருத்துவர்கள் கூறும் காரணம்..



bluetooth-headphone-explosion-kills-15-year-old-boy-in

காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட்போன் வெடித்ததில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சோமு பகுதியில் உள்ள உதய்புரியா கிராமத்தில் வசிப்பவர் ராகேஷ். இவர் தனது புளூடூத் இயர்போன்களைப் பயன்படுத்தி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​​திடீரென அவரது சாதனம் வெடித்துள்ளது.

இதில் மயங்கி விழுந்த அவரை, பெற்றோர் உடனடியாக அருகில் இருக்கும் சித்திவிநாயக் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவந்தநிலையில், சிறுவன் சிகிச்சையின் போது இறந்துள்ளார்.

டாக்டர் எல்என் ருண்ட்லா கூற்றுப்படி, "அநேகமாக இது நாட்டில் இது போன்ற முதல் வழக்கு.. சாதனம் வெடித்த சத்தத்தில், அந்த சிறுவன் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம்." என அவர் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் இளைஞர்களின் இரு காதுகளுக்கும் காயம் ஏற்பட்டது.  ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.