இந்தியா

பாஜகவிற்கு கொரோனாவை விட தேர்தல் தான் முக்கியம்.! ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் சிவசேனா.!

Summary:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொரோனாவை சமாளிப்பதை தவிர்த்துவிட்டு உத்தரபிரதேச தேர்தலில் கவனம் செலுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் பாஜகவை விமர்சித்துக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உத்தரபிரதேச தேர்தலையொட்டி ‘மிஷன் உத்தரப்பிரதேசம்’ பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினர். இதை பார்க்கும்போது நாட்டின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது போலவும், தேர்தல் அறிவித்து போட்டியிடும் வேலை மட்டுமே இருப்பது போலவும் தோன்றுகிறது.

ஜனநாயகத்தில் தேர்தல் முக்கியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக தேர்தலுக்கு முன்னுரிமை அளிப்பதா? உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் சரியாக செயல்பட முடியாத நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அந்த மாநில சட்டசபை தேர்தலில் தாங்கள் இழந்த நற்பெயரை எப்படி மேம்படுத்துவது, தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து பா.ஜனதா சிந்தித்து வருகிறது.

கொரோனா சமயத்தில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா அரசின் செயல்பாடு மோசமாக இருந்தது. சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்லாமல் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சிக்கலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.


Advertisement