கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவி.. மனம்மாறிய கணவருக்கு ஆப்பு வைத்த கேடி மனைவி.! Bihar Wife Check Made to husband 

 

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் வசித்து வருபவர் கவுதம். இவரின் மனைவி பூஜா. தம்பதிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். பூஜாவுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. 

ஓட்டம்பிடித்த மனைவி: 

இதன் மூலமாக உத்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் வினோத் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், பின்னாளில் கள்ளக்காதல் மலர்ந்து பூஜா வினோத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கெளதம் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். 

இதையும் படிங்க: #JustIN: பயணிகள் இரயிலில் பயங்கர தீ விபத்து; பீகாரில் பகீர் சம்பவம்.!

கணவனுக்கு செக்

இந்த தகவலை அறிந்த பூஜா, தனது கணவரிடம் வந்து நானே உங்களின் மனைவி என பிரச்சனை செய்துள்ளார். மேலும், தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்தது தவறு என்பதால், தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த தகவல் கணவருக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளதால், சட்ட நடவடிக்கை எடுக்க அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு வருகிறார்.

இதையும் படிங்க: தாய் உயிரிழந்தாலும் ஜனநாயக கடமையாற்றிய மகன்; பீகாரில் நெகிழ்ச்சி சம்பவம்.!