அதிகாலையில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே துறை அறிவித்த தொகை!!

அதிகாலையில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரயில்வே துறை அறிவித்த தொகை!!



bihar train accident


ஜோக்பானி - ஆனந்த் விஹார் மார்க்கமாக செல்லும் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் மாநிலம் வைஷாலி அருகே இன்று அதிகாலை 3:58 மணியளவில் தடம்புரண்டது.

இந்த விபத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலின் 9 பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்தன. இந்த கோர விபத்தில் இதுவரை 7 பேர் வரை பலயாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ரயில்வே துறையின் சார்பாக மீட்பு ரயில் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டள்ளது.



தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதே விபத்திற்கு காரணம் என்றும்,  தண்டவாளத்தின் அடியில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. விபத்து குறித்து பாரத பிரதமர் மோடி தனது ட்விட்டர்பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.