இந்தியா

ஜெய்ஸ்ரீராம் சொல்லு..! சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை கத்தியால் வெட்ட முயன்ற கும்பல்..! பட்டப்பகலில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!

Summary:

Bihar man Force Muslim Man to Chant Jai Shri Ram

ஜெய்ஸ்ரீராம் என சொல்ல மறுத்த முஸ்லீம் இளைஞரின் நாக்கை அறுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்த முகம்மது இஸ்ரேல் என்ற இளைஞர், கடந்த இரண்டாம் தேதி அவர் வசித்துவரும் பகுதியில் கடுமையான மழை பெய்ததை அடுத்து தனது செல் போனிற்கு சார்ஜ் போட அருகில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சிலர் முகமது இஸ்ரேலிடம் ஜெய் ஸ்ரீ ராம் என கூறும்படி வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு முகமது இஸ்ரேல் மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் இஸ்ரேலின் நாக்கை வெட்ட முற்பட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த இளைஞரின் கழுத்து, தலையில் காயம் ஏற்பட்டு சரிந்துவிழவே அவர் இறந்துவிட்டதாக நினைத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

இதனை அடுத்து இஸ்ரேலின் சகோதரர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த போலீசார் இஸ்ரேலிடம் நடத்திய விசாரணையை அடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், இஸ்ரேலை தாக்கியது கோபால், ராகுல் பன்வரிலால், லாகான், பிரின்ஸ், அபிஷேக், நிதிஷ் சிங் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement