இந்தியா

அட பாவி.. பெத்த பிள்ளைங்கன்னுகூட பாக்கல..!! மனைவி, 2 பிள்ளைகளை உயிருடன் எரித்துக்கொலை செய்த கொடூரன்..

Summary:

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செ

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஒரு நபர் தனது மனைவி மற்றும் இரண்டு மைனர் மகள்களை எரித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபரும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக கதிஹார் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி (எஸ்.டி.பி.ஓ) அமர்காந்த் ஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாவட்டத்தின் பிரான்பூர் காவல் நிலைய பகுதியில் உள்ள லாபா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபர் தனது மனைவி (32) மற்றும் இரண்டு மகள்களை (ஏழு வயது மற்றும் ஐந்து வயது) - தனது தாய் மற்றும் ஒரு சிலரின் உதவியுடன் மண்ணென்னையை ஊற்றி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த சம்பவம் அதிகாலையில் நடந்ததாகவும், அந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும் தெரிவித்துள்ளனர். கணவன் மனைவி இடையே நடந்த சண்டைதான் இந்த கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Advertisement