8 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கு.. இந்தியாவில் முதல் முறையாக நீதிபதியின் அதிரடி தீர்ப்பு.!

8 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கு.. இந்தியாவில் முதல் முறையாக நீதிபதியின் அதிரடி தீர்ப்பு.!


Bihar Child Sexual Abuse One Day Judgement by Justice

பீகார் மாநிலத்தில் உள்ள ஆராரியா மாவட்டத்தை சார்ந்த 8 வயது சிறுமி, கடந்த 22 ஆம் தேதி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளியை மறுநாளே கைது செய்தனர். 

குற்றவாளி மீதான வழக்கு ஆராரியா போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், கடந்த மாதம் 4 ஆம் தேதி சாட்சிகளின் வாக்குமூல பதிவு மற்றும் இருதரப்பு வாதம், தண்டனை ஆகியவை ஒரேநாளில் நடைபெற்றது. 

இவ்வழக்கில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.7 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Bihar

இவ்வழக்கு விசாரணை இந்தியாவிலேயே விரைந்து ஒரேநாளில் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்காக இருக்கிறது. தீர்ப்பு ஒரேநாளில் வழங்கப்பட்டாலும், தீர்ப்பின் விபரம் 26 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த கற்பழிப்பு வழக்கு, 3 நாட்களில் தீர்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கு 2018 ஆம் வருடம் நடந்தது. இதுவே விரைந்து தீர்ப்பு வழங்கிய வழக்காக இருந்த நிலையில், பீகார் மாநிலம் நீதிமன்றம் ஒரேநாளில் தீர்ப்பு வழங்கி சாதனை புரிந்துள்ளது.