கொரோனா பாதுகாப்பு கவசத்தை ரெயின்கோட் என நினைத்து ஆட்டைய போட்ட நபர்.! கடைசியில் நிகழ்ந்த சோகம்..

கொரோனா பாதுகாப்பு கவசத்தை ரெயின்கோட் என நினைத்து ஆட்டைய போட்ட நபர்.! கடைசியில் நிகழ்ந்த சோகம்..


BBE kiteai raincourt ena nenaitha nabar, kadachil nigailntha sogam

மகாராஷ்டிராவின் நாக்பூரில் நகரில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நபர் ஒருவர் நன்கு குடித்து விட்டு கால்வாய் ஒன்றில் விழுந்துள்ளார். அப்போது அந்த நபருக்கு காயம் ஏற்ப்பட்டதை அடுத்து நாக்பூரில் உள்ள மாயோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அப்போது அங்கு சிகிச்சை முடித்து விட்டு வெளியே வரும் போது மருத்துவமனையில் இருந்த பிபிஇ கிட்டை ரெயின்கோட் என நினைத்து மது போதையில் வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். எடுத்து சென்றது மட்டுமின்றி அதனை நண்பர் ஒருவருக்கு 1000 ரூபாய்க்கு விற்க நினைத்துள்ளார்.

BBE kite

அப்போது தான் அவரது நண்பர்கள் அது ரெயின்கோட் இல்லை பிபிஇ கிட் என கூறியுள்ளனர். மேலும் சுகாதார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வந்து அந்த நபரிடமிருந்து பிபிஇ கிட்டை பிடுங்கி எறிந்ததுடன் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் அந்த நபருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அதனையடுத்து அந்த நபரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.