காதலியுடன் ரொமான்ஸ்.. திடீரென உள்ளே புகுந்த தந்தை.. கர்நாடகாவில் தமிழர் அடித்து கொலை..!!Bangalore VV Puram Love Boy Native Tamil Nivesh Kumar Murder by Auto Driver Narayan

மகளுடன் தனிமையில் இருந்த இளைஞரை பெண்ணின் தந்தை அடித்து கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் வி.வி புரம், வினோபா நகரை சார்ந்தவர் லோகநாதன். இவரது சொந்த ஊர் தமிழகத்தில் இருக்கிறது. லோகநாதனின் சகோதரர் மகன் நிவேஷ் குமார் (வயது 19), தனது பெரியப்பா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் தேதி தமிழகத்தில் வசித்து வந்த உறவினர் இயற்கையை எய்தியதால், லோகநாதன் தனது குடும்பத்தினருடன் தமிழகம் சென்றுள்ளார். நிவேஷ் குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 

கடந்த மாதம் 29 ஆம் தேதி தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு லோகநாதன் திரும்பி வந்த நிலையில், சகோதரர் மகன் காணாமல் போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். நிவேஷ் குமாரை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால், வி.வி. புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். நிவேஷ் குமார் மாயமானது குறித்து அனைத்து காவல் நிலையத்திற்கும் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

India

இந்நிலையில், விக்டோரியா மருத்துவமனையில் வாலிபரின் உடல் இருப்பதாகவும், இது மாயமான நிவேஷ் குமாரின் உடலை போல் இருக்கிறது என்றும் காலசிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, வி.வி. புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் வாலிபரின் உடலை கைப்பற்றி, நிவேஷ் குமாரின் உறவினர்களை வரச்சொல்லி அடையாளம் காண செய்கையில், அது நிவேஷ் குமாரின் சடலம் என உறுதியாகியுள்ளது. 

விசாரணையில், நிவேஷ் குமார் கடந்த மாதம் 28 ஆம் தேதி அனாதையாக சாலையில் கிடந்ததாக கூறி மருத்துவமனையில் ஒருவர் உடலை சேர்த்ததும் உறுதியானது. நிவேஷின் தலையில் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டதற்கான அடையாளமும் தென்பட, வி.வி. புரம் காவல் துறையினர் கொலையாளிகளை தேடி வந்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னர், நிவேஷ் குமாரை கொலை செய்ததாக நிவேஷின் காதலியின் தந்தை நாராயண் (வயது 46) கைது செய்யப்பட்டார். 

India

கைதாகிய நாராயண் வினோபா நகரில் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், அவருக்கு 17 வயதுடைய மகள் இருக்கிறார். இதே பகுதியில், பெரியப்பாவின் வீட்டில் வசித்து வந்த நிவேஷும் - நாராயணின் மகளும் காதல் வயப்பட்டு காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி நாராயண் வேலைக்கு சென்றதும், அவரது வீட்டிற்கு சென்ற நிவேஷ் காதலியுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக நாராயண் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

மகளுடன் நிவேஷ் இருப்பதை பார்த்து பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிய நாராயண், அவரிடம் வாக்குவாதம் செய்து வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து நிவேஷ் குமரியின் தலையில் பலமாக தாக்கி, உயிருக்கு போராடிய நிவேஷை ஆட்டோவில் ஏற்றி விக்டோரியா மருத்துவமனையில் சாலையில் அனாதையாக வாலிபர் இருந்தார் என அனுமதி செய்து தப்பி சென்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நிவேஷ் குமார் உயிரிழந்துள்ளார்.  

India

இதுகுறித்த வாக்குமூலத்தை குறித்துக்கொண்டு வி.வி. புரம் காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநர் நாராயணை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.