சாமியார் பங்கேற்ற விழாவில் தீப்பற்றி எரிந்த பலூன்கள்! கண்ணிமைக்கும் நொடியில் என்ன நடந்தது ? வைரலாகும் வீடியோ.!

சாமியார் பங்கேற்ற விழாவில் தீப்பற்றி எரிந்த பலூன்கள்! கண்ணிமைக்கும் நொடியில் என்ன நடந்தது ? வைரலாகும் வீடியோ.!


balloons-catch-fire-at-suttur-mutt-in-mysuru-karnataka

கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள நஞ்ஜனாகுட் பகுதியில், நேற்று குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது. அதனை தொடங்கி வைக்க சுத்தூரு மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சிவராத்திரி தேசிக சுவாமி கலந்துகொண்டார். 

மேலும் அப்பகுதி முழுவதும் அலங்காரத்துக்காக ஹீலியம் பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் சாமியார் ஸ்ரீ சிவராத்திரி தேசிக சுவாமி விழாவை ஏற்பாடு செய்தவர்களுடன் ஒன்றாக  புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

ballon

அப்பொழுது அவருக்கு பின்னால் சிலர் பலூன்களை கையில் பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிடமாக பலூன்கள்  திடீரென தீப்பிடித்து எரிந்தது. 

உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து தீயை அணைத்தனர். இதில் அங்கிருந்த மடாதிபதி உள்ளிட்ட மூவர் பலத்த காயமடைந்தனர் மேலும் சாமியார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.