திடீரென வாட்ஸப்பில் வெளியான ஆபாச படங்கள்! ஆடிப்போன பெண்கள்! என்ன நடந்தது தெரியுமா?

திடீரென வாட்ஸப்பில் வெளியான ஆபாச படங்கள்! ஆடிப்போன பெண்கள்! என்ன நடந்தது தெரியுமா?



Bad images shared Whatsapp group in kerala

தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள வாட்சப் செயலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பேஸ்புக் நிறுவனம் வாட்சப் நிறுவனத்தை கைப்பற்றி புது புது வசதிகளை வழங்கிவருகிறது. குறிப்பாக போலியான செய்திகள் பரப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவின் தலைமை செயலகத்தில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகளுக்கென ஒரு தனி வாட்சப் குழு இயங்கிவந்துள்ளது. வேலை சம்மந்தமான செய்திகளை பகிர்ந்துகொள்ள, நிர்வாகிகளுடன் விவாதிக்க போன்ற காரணங்களுக்காக அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Whatsapp

இந்நிலையில் அந்த குழுவின் நிர்வாகி உறுப்பினர்களுடன் விவாதித்துக்கொண்டிருக்கும் வேளையில் திடீரென அந்த குழுவில் ஆபாச புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழுவில் இருக்கும் பெண் உறுப்பினர்கள் இது குறித்து குழு நிர்வாகியிடம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகைப்படங்களை குழு உறுப்பினரின் தொலைபேசி காணாமல் போய்விட்டதாகவும், தொலைபேசியை திருடிய நபர்தான் இப்படி செய்திருக்கக்கூடும் என குழு நிர்வாகி தெரிவித்திருந்தார். ஆனால், சம்மந்தப்பட்ட உறுப்பினரின் தொலைபேசி தொலைந்துபோகவில்லை என்றும் இரண்டுநாட்கள் கழித்து அதே தொலைபேசி அந்த நபரிடம் இருந்ததாகவும், குழு நிர்வாகி தங்களிடம் பொய் சொல்லிவிட்டதாகவும் குழு உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.