இந்தியா

திருமணத்தை நிறுத்திவிட்டு, தந்தை இறந்தநிலையிலும் ஆட்டோ டிரைவர் செய்த நெகிழ்ச்சி காரியம்!

Summary:

Auto driver donate food for poor people

மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் ஆட்டோ டிரைவராக பணியாற்றுபவர் அக் ஷய் கொத்தவால்.  30 வயது நிறைந்த  இவருக்கு மே 25-ம்தேதி திருமணம் நடத்த பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டிருக்கும் நிலையில் தற்போது  திருமணத்தை நடத்துவது சரியாக இருக்காது என்று எண்ணிய அக் ஷய், தன்னை திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணிடம் பேசி திருமணத்தை தள்ளிவைத்தார்.

பின்னர் அக் ஷய் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தனது திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் இருந்து தினமும் 400 பேருக்கு உணவு தயாரித்து, அதனை தங்கள் பகுதியில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கி வந்துள்ளார். 

இந்நிலையில் அவ்வாறு அவர் உணவு வழங்கிக் கொண்டிருக்கும் போது அவரது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனாலும் அவர் தொடர்ந்து உணவு வழங்கி வந்துள்ளார். இந்நிலையில்  சிறிது நேரத்திலேயே அவரது தந்தை உயிரிழந்துள்ளதாக அவருக்கு செய்தி வந்துள்ளது. பின்னரே அவர் விரைந்து தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் தனது தந்தையின் ஈமச்சடங்குகள் முடிந்தபின் தொடர்ந்து ஏழை மக்களுக்கு என்னால் முடிந்த வரை உதவுவேன் என அக் ஷய் கூறியுள்ளார்


Advertisement