யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் சோகம்.. அரங்கேறிய சம்பவம்..! பதைபதைப்பு வீடியோ..!!

யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் சோகம்.. அரங்கேறிய சம்பவம்..! பதைபதைப்பு வீடியோ..!!


Assam Dhubri district Tamarhat Village Man Attacked by Elephant Video Goes Viral

கிராமத்திற்குள் வந்த யானையை காட்டிற்குள் விரட்டும் முயற்சியின் போது, பொதுமக்களில் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள துப்பிரி மாவட்டம், தமர்ஹட் கிராமத்தில் யானை புகுந்துள்ளது. கடந்த 18 ஆம் தேதி யானை கிராமத்திற்குள் புகுந்த நிலையில், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், ஊர் பொதுமக்களின் உதவியுடன் யானையை வனப்பகுதியில் விரட்டும் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். 

Assam

அப்போது, யானை திடீரென கிராமத்தை சார்ந்த ஒருவரை துரத்தியுள்ளது. பதறிப்போன நபர் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து, பயத்தில் தடுமாறி விழுந்துவிடுகிறார். அவரை யானை மிதித்து, தூக்கி எரிந்தது. 

உள்ளூர் மக்கள் மற்றும் வனத்துறையினர் யானையை விரட்டியடித்து, பாதிக்கப்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.