இந்தியா லைப் ஸ்டைல்

பல்துலக்கும்போது டூத் பிரஸை அப்படியே விழுங்கிவிட்ட நபர்! அதன் பிறகு என்ன ஆனது தெரியுமா?

Summary:

AP man swallows tooth brush accidently

அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பல் துலக்கும் போது சுமார் 19 சென்டிமீட்டர் நீளமுள்ள டூத் பிரஷை விழுங்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல பிரதேசம் ரோயிங் லோவர் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வரும் 39 வயது நபர் ஒருவர் கடந்த செப்டம்பர் 15 தேதி காலை வழக்கம்போல் பல்துலக்கி உள்ளார். அப்போது குறிப்பிட்ட நபர் தனது தொண்டையின் பின்புறத்தை டூத் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது 19 சென்டிமீட்டர் நீளமுள்ள டூத் பிரஷ்ஷை தற்செயலாக விழுங்கி விட்டார். பின்னர் தாம் டூத் பிரஷை விளங்கிவிட்டது குறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் மருத்துவர்களின் பரிந்துரையின் படி அவருக்கு வயது எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் தொண்டை அல்லது  உணவுக் குழாயிலும் அந்த டூத் பிரஷினை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து டூத் பிரஷ் அவரது அடிவயிற்று பகுதிக்குள் சென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவர்கள் அவருக்கு லபரோடோமி பரிசோதனைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் விழுங்கிய டூத் பிரஷ் அவரது அடி வயிற்றில் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து டூத் பிரஷ் வெளியே எடுக்க முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு 30 முதல் 35 நிமிடங்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட டூத் பிரஷ் அவரது அடிவயிற்றில் இருந்து எடுக்கப்பட்டது.

தற்போது குறிப்பிட்ட நோயாளியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், உயிருக்கு எந்த வித ஆப்பத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பிரஷை விழுங்கிய போது அதிர்ஷ்டவசமாக அவரது வயிற்றில் எந்த ஒரு வலியும் ஏற்படவில்லை என்றும் அவரது அடிவயிற்றுப் பகுதியில் சிறிய அளவிலான அசௌகரியத்தை மட்டுமே உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.


Advertisement